புதுடில்லி: நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளித்து யு.ஜி.சி உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பல்கலைகழக மானியகுழு குஹாத் என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து. கமிட்டி அளித்த பரிந்துரை அடிப்படையில் அவை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது
ஜூலை 1 முதல் 31ம் தேதி வரையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம். வாரத்திற்கு ஆறுநாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கையை வரும் ஆக.,1 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்தலாம். மே 15ம் தேதி முதல் ஆன்லைனில் பிராஜக்ட் ,வைவா, உள்ளிட்ட உள் பதிப்பீட்டை நடத்தி கொள்ளலாம். என பரிந்துரைத்துள்ளது.